ஆள் கடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட நீதிபதி தலைமையில் 9 பேர்கொண்ட குழு அமைப்பு

திருவாரூர் ,ஆக. 22: மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனித கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட நீதிபதி கலைமதி தலைமையில் நடைபெற்றது. இதில் சார்பு நீதிபதி மோகனாம்பாள் ,தலைமை குற்றவியல் நீதிபதி விஜயகுமார்,மாவட்ட எஸ்பி துரை மற்றும் டிஆர்ஓ பொன்னம்மாள்,மாவட்ட திட்ட அலுவலர் தெய்வநாயகி ,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரோஸ் ஆன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் மனித கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் மனித கடத்தல் தடுப்பு தொடர்பாக மாவட்ட நீதிபதி தலைமையில் சார்பு நீதிபதி மோகனம்பாள் ,டிஆர்ஓ பொன்னம்மாள் ,டி.எஸ் .பி .நடராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா டார்லிங்,தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன், தொழிலாளர் உதவி இயக்குனர் சித்தார்த்தன் உட்பட 9 பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

Related Stories: