கண்காணிப்பு அதிகாரி உத்தரவு திருத்துறைப்பூண்டியில் புயலால் சேதமான அம்மா உணவகத்தை திறக்க கோரி நுகர்வோர் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

திருத்துறைப்பூண்டி, ஆக.22:

திருத்துறைப்பூண்டியில் புயலால் சேதமான அம்மா உணவகத்தை நுகர்வோர்மையம் சார்பில் வரும் 24ம் தேதி நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. கடந்த கஜா புயலால் அம்மா உணவக கட்டிடங்கள், பொருட்கள் ரூ. 20 லட்சம் பெறுமானமுள்ளவை சேதமானது. கடந்த 8 மாதங்களாக உணவகம் செயல்பட இல்லை. இதனால் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்று கோரிக்கையை நுகர்வோர் மையம் உரிய அலுவலர்களுக்கு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. இதனால் வரும் 24ம் தேதி திருத்துறைப்பூண்டியில் நகராட்சி அலுவலகத்துக்கு அருகில் மாவட்ட நுகர்வோர் மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் பாஸ்கரன் முன்னிலையில் அமைதிகூட்டம் நடந்தது. நுகர்வோர் மையநிறுவனர் டாக்டர் மணி, நுகர்வோர் மையமாவட்டதலைவர் வக்கீல் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் செப்டம்பர் முதல் வாரத்தில் அம்மா உணவகம் மீண்டும் திறக்கநடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.மாவட்ட நுகர்வோர் மையம் சார்பில் நன்றி தெரிவித்து போராட்டம் ஒத்திவைக்கபட்டது.

Related Stories: