குறைகளை களைய கோரிக்கை நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூர், ஆக. 22: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பொது தொழிலாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. மாநில தலைவர் குமார் தலைமை வகித்தார். .மாநில துணை பொதுச் செயலாளர்மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் நல சட்டங்கள் திருத்தப்படுவதை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பொது விநியோகத் திட்டத்தை பாதுகாத்திட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் ,சுமைபணி தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கிட வேண்டும்,கணினிப் பிரிவு ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் ,கொள்முதல் பிரிவு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் .மாநில துணை பொதுச்செயலாளர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முந்தைய கட்டணத்தையே தற்போது செலுத்தி வருவதால் மக்களுக்கு கிடைக்க  வேண்டிய  அரசு அறிவித்துள்ள 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்காமல்  போகிறது.

Related Stories: