திருத்துறைப்பூண்டியில் வீடுகளில் கணக்கீட்டாளர் அளவீடு எடுக்காததால் பழைய மின்கட்டணத்தையே செலுத்தும் மக்கள்

திருத்துறைப்பூண்டி ஆக.22:

திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்கணக்கீட்டாளர் வீடுகளில் எடுக்காததால் பழைய கட்டணத்தையே மக்கள் செலுத்துகின்றனர். இந்த குறைகளை களைய வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மின்வாரியத்தில் நிறைய புதுமையானமாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. மின் கட்டணம் ஆன்லைனில் செலுத்தி விடலாம், நமது மொபைல் எண்ணிற்கு கட்டணம் தொகை செலுத்த வேண்டிய தேதிஆகியவை வந்து விடுகிறது.மின் தடை குறித்த விபரங்கள் நமக்கு குறுஞ்செய்தியாக வந்து விடுகிறது.ஆனால் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளில் மின் வாரிய கணக்கீட்டாளர் பெரும்பாலான வீடுகளில் மின்பயன்பாட்டிற்கான மின்அளவீடு எடுக்கவில்லை. முந்தைய கட்டணத்தையே தற்போது செலுத்தி வருவதால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு அறிவித்துள்ள 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்காமல் போகிறது. கடந்த முறை செலுத்திய மின் கட்டணத்தையே தற்போதும் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கீடு சரியாக கணக்கீடு செய்யாததாலும், அரசு திட்டம் முறையாக மக்களுக்கு கிடைக்கவில்லை என புலம்பி வருகின்றனர்.

அடுத்து மின் கணக்கீடு செய்யும் போது ஏற்கனவே வழங்காமல் உள்ள இலவச மின்சாரத்திற்கான மானிய தொகையை வரவு வைத்தும், ஏற்கனவே பழையகட்டணத்தையே செலுத்திய தொகையை வரவு வைத்தும் கணக்கீடு செய்து குறித்தால் பொது மக்களுக்கு சரியான கணக்கீடாக இருக்கும். மேலும் மின் கணக்கீட்டாளர் நிறைய வீடுகளில் பொறுமையாக இருந்து மின் அட்டைகளில் தொகையை குறித்து செல்வதில்லை. எல்லாம் மெசேஜ் வரும், ஆன்லைனில் பார்த்துக்கொள்ளுங்கள் என்றுகூறுகின்றனர்.மின் கட்டணம் செலுத்த செல்லும் போது தான் புதியதாக டெபாசிட் தொகை, பழையஅரியர் தொகை, ஜிஎஸ்டி என தெரிய வரும்போது பொதுமக்கள் அதிர்ச்சியடைகின்றனர்.பெரும்பாலான வீடுகளில் கணவன் மனைவி இருவரும் கூலி வேலைக்கோ, அரசு வேலைக்கோ, வேறு வேலை நிமித்தமாகவோ வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிட்டால் மின் கணக்கீட்டாளர் சென்றுவிட்டு திரும்பி விடுகின்றனர்.எனவே ஞாயிற்றுகிழமைகளில் மின் கணக்கீட்டாளர்களை வீடுகளுக்கு சென்று கணக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மின் கணக்கீடுகளில் உள்ள குறைகளை களைந்து நியாயமான மின் கட்டணத்தை மின்வாரியம் வசூல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகஉள்ளது.

Related Stories: