ஊத்துக்ேகாட்டை வட்டத்தில் 14 கிராமங்களில் குறை தீர்ப்பு முகாம்

ஊத்துக்கோட்டை, ஆக. 22: ஊத்துக்கோட்டை வட்டத்தில், 14 கிராமங்களில் மக்கள் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடந்தது.ஊத்துக்கோட்டை வட்டத்தில், 21ம் தேதி முதல் 29ம் தேதி வரை அனைத்து கிராமங்களிலும் மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நேற்று தொங்கியது. இது, 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இம்முகாம்,  முதல் கட்டமாக ஊத்துக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடந்தது.  இம்முகாமிற்கு கிராம நிர்வாக அலுவலர் ராஜி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் யுகேந்தர், பேரூராட்சி செயல் அலுவலர்  ரவிச்சந்திரபாபு முன்னிலை வகித்தனர், மண்டல துணை வட்டாட்சியர் பாரதி கலந்துகொண்டார்.

இதே போன்று, தாராட்சி கிராமத்தில் வி.ஏ.ஒ சுதாகர் தலைமையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகர் ஆகியோரிடம் மனுக்களை வழங்கினர்.  பேரண்டூர் கிராமத்தில் வி.ஏ.ஒ சரவணன் தலைமையில் குறுவட்ட அலுவலர் கோபி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி  ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.  பெரியபாளையம் வி.ஏ.ஒ செல்வகுமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரமணி முன்னிலை வகித்தார்.இதேபோல்,  ராள்ளபாடி கிராமத்தில் வி.ஏ.ஒ  சதீஷ் தலைமை தாங்கினார்.  மஞ்சங்காரணை, பென்னலூர் பேட்டை, கூனிப்பாளையம், அம்மம்பாக்கம், வேளகாபுரம், மாம்பாக்கம் என 14 கிராமங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது.முன்னதாக, ஊத்துக்கோட்டை தாசில்தார் செல்வகுமார் கன்னிகைப்பேர் பகுதியில் முகாமை தொடக்கி வைத்தார். இதில், வி.ஏ.ஒ லட்சுமி தலைமையில் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். நேற்று 14 கிராமத்தில் நடந்த சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் மொத்தம் 270 மனுக்கள் வந்தது.  இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: