சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு 45 லட்சம் தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது

சென்னை: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர்ஏசியா விமானம் நேற்று காலை 7.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது  சென்னையை சேர்ந்த அப்துல் ரஹ்மான் (30), இப்ராஹிம்ஷ்கா (25) ஆகிய இரண்டு பேர் சுற்றுலா பயணிகள் விசாவில் மலேசியாவுக்கு சென்றுவிட்டு வந்திருந்தனர். அவர்களை சோதனை செய்தபோது 18 பழைய லேப்டாப்கள் இருப்பதை  கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ₹1 லட்சம். பின்னர் இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது ஆசனவாயில் 450 கிராம் தங்க கட்டிகளை வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு  ₹17.5 லட்சம்.

இந்நிலையில் காலை 8.40 துபாய் எமரேட் விமானம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த பசீத் அகமது (49) ஷேக் தாவுத், (32)  ஆகியோரை சோதனை செய்தபோது ₹1.50 லட்சம் மதிப்பிலான 14 பழைய லேப்டாப் மற்றும் சிகரெட் பண்டல்கள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது  ஆசனவாயில் 650 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ₹25 லட்சம் ஆகும். இருவரிடம் இருந்து மொத்தம் 26.5 லட்சம் மதிப்பு லேப்டாப், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: