அமைப்பு சாரா தொழிலாளருக்கு விபத்து இழப்பீடு ரூ.5 லட்சம் வேண்டும்

திண்டுக்கல், ஆக. 20: விபத்து இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க கோரி திண்டுக்கல் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு செய்தனர்.

திண்டுக்கல் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் நேற்று பெருந்திரள் முறையீடு  செய்தனர். மாவட்ட தலைவர் பிரபாகன் தலைமை வகிக்க, பொருளாளர் மனோகரன், செயலாளர் கணேசன் முன்னகலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்திற்கு வழங்குவதுபோல அனைத்து நலவாரியத்தினருக்கும் விபத்து இறப்பு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். புதிய பதிவிற்கு ஆய்வு என்ற பெயரில் நலவாரிய அட்டை வழங்குவதில் காலதாமதம் செய்யக்கூடாது. கேட்பு மனுக்களுக்கு 3 மாத காலத்திற்குள் பணப்பலன்களை வழங்கிட வேண்டும். கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் பென்சன் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பெண்களுக்கு 55 வயதில் பென்சன் வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2018 ஜனவரி கல்வி உதவி மற்றும் பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. தாலுகா அளவில் நடக்கும் பதிவு புதுப்பித்தல் முகாம் குறித்து சங்கங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்திட வேண்டும். நலவாரிய அலுவலகத்தில் போதிய ஊழியர்களை நியமனம் செய்து, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரிய அலுவலகத்தில் குடிநீர், கழிவறை வசதி வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சாலை போக்குவரத்து சங்க செயலாளர் தனசாமி, ஆட்டோ சங்க செயலாளர் முருகேசன், சுமை சங்க செயலாளர் பிச்சைமுத்து, பொது தொழிலாளர் சங்க செயலாளர் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.நூலகமாக மாறும் பள்ளிகள் பட்டியலில் தென்மாவட்டங்களில் சிவகங்கை  மாவட்டத்தில் 4 பள்ளிகள், விருதுநகர் மாவட்டத்தில் 3 பள்ளிகள், திண்டுக்கல்  மாவட்டத்தில் 2 பள்ளிகள், தேனி மாவட்டத்தில் ஒரு பள்ளி இடம் பெற்றுள்ளது.

Related Stories: