ரம்யா சத்யநாதன் வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா

திருக்காட்டுப்பள்ளி, ஆக. 20: வல்லம் ரம்யா சத்தியநாதன் வித்யாஷ்ரம் பள்ளியில் 5ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் கிரீடா-2019 மற்றும் சுதந்திர தினவிழா விமன்ஸ் எம்பவர்மென்ட் என்ற பொருளில் கொண்டாடப்பட்டது.ரம்யா சத்யநாதன் கல்விக்குழும தலைவர் சத்யநாதன் தலைமை ஏற்றார். மாணவி திவ்யா வரவேற்றார். என்ரூட்டெக்னாலஜி நிறுவனர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வெட்ரன் விங்க் கமாண்டர் ஜெயக்குமார் சிறப்பு விருந்திராக பங்கேற்று கொடியேற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று ஒலிம்பிக் தீபம் ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

கல்வி குழும செயலாளர் ரம்யா சத்தியநாதன், பாலிடெக்னிக் முதல்வர் குமரன் ஆகியோர் பங்கேற்றனர். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று 600க்கும் மேற்பட்ட சான்றிதழ், பரிசுகளை வென்றனர். சாம்பியன்ஷிப் முதலிடத்தை எம்ரல்ட் அணியும், இரண்டாமிடத்தை டோபாஸ் அணியும் கைப்பற்றியது. சிறப்பான அணிவகுப்பு கேடயத்தை எமரல்ட் அணியும், சிறந்த ஒருங்கிணைவு செயல்பாட்டு கேடயத்தை ரூபி அணியும், நன்னடத்தைக்கான கேடயத்தை சபையர் அணியும் பெற்றது.தனித்திறமை சாம்பியன்ஷிப் கோப்பைக்காக சீனியர் பிரிவில் விக்னேஷ் , ஜூனியர் பிரிவில் பாலாஜி, சப்ஜூனியர் பிரிவில் தேசிகன் தேர்வு பெற்றனர். பள்ளி முதல்வர் முகமது ரபி நன்றி கூறினார்.

Related Stories: