எக்ஸல் மருத்துவ கல்லூரியில் மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

குமாரபாளையம், ஆக.20: குமாரபாளையம் எக்ஸல் மருத்துவ கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன் தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் மதன்கார்த்திக் முன்னிலை வகித்தார். பிஸியோதெரபி கல்லூரி முதல்வர் ஐயப்பன் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட ஆளுனர் டாக்டர் ஜார்ஜ் சுந்தர்ராஜ் பேசுகையில், ‘கல்லூரி பருவத்தில் உயர்ந்த சிந்தனையையும், துணிந்து முடிவெடுக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் சாதிக்க கடின உழைப்பு மட்டுமே போதாது. உழைப்போடு புதிய சிந்தனை திறனையும் பெற வேண்டும். எந்த தொழிலையும் ஆழ்ந்த அர்ப்பணிப்போடு நேசித்து செய்ய வேண்டும். காலத்தை யார் மதிக்கிறார்களோ, அவர்களை காலம் மதிக்கும். இலக்கினை தெளிவாக நிர்ணயம் செய்து, அதற்காக ஒவ்வொரு விநாடியையும் பயன்படுத்துங்கள்,’ என்றார். வேலை வாய்ப்புத்துறை இயக்குனர் சம்பத் நன்றி கூறினார். விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: