தாபா, ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

காரிமங்கலம், ஆக.20: காரிமங்கலம் பகுதியில் செயல்படும், தாபாக்கள், ஹோட்டல்கள், பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, 15கடைகளுக்கு எச்சரிக்கை ேநாட்டீஸ் வழங்கினர். காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும், தாபாக்கள், பேக்கரிகள், ேஹாட்டல்களில் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் மற்றும் சாயங்களை பயன்படுத்தி உணவு பொருள் தயாரிப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து தினகரன் நாளிதழில், கடந்த 17ம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, காரிமங்கலம் சுற்று வட்டாரப்பகுதிகளில் செயல்படும் கடைகளில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பானுசுஜாதா உத்தரவின் ேபரில், உணவு பாதுக்காப்பு துறை அதிகாரி கந்தசாமி, காரிமங்கலம் பைபாஸ் ரோடு, மொரப்பூர் ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 15க்கும் மேற்பட்ட தாபாக்கள் மற்றும் உணவகங்களில் ஆய்வு செய்தார். அப்போது தடைசெய்யப்பட்ட ரசாயன உப்பு, கலர் பொடிகள், காலாவதியான சாஸ் மற்றும் வினிகர் பாட்டில்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து அழித்து, 15கடையின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Related Stories: