கல் குவாரிக்கு அனுமதி வழங்கினால் பல ஏக்கர் விவசாயம் பாழாகும் அபாயம் தடை விதிக்க விவசாயிகள் கலெக்டரிடம் மனு

விருதுநகர், ஆக. 14: விருதுநகர் அருகே எரிச்சநத்தத்தில் 25 ஏக்கரில் கல்குவாரி அமைக்க அனுமதி அளித்தால் நூற்றுக்காணக்கான ஏக்கரில் விவசாயம் பாதிக்கும் என்பதால் கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் எரிச்சநத்தம் பகுதி விவசாயிகள் அளித்த மனுவில், எரிச்சநத்தம் கிராமத்தில் 6 சர்வே எண்களில் கல்குவாரி அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கல்குவாரி அமைத்தால் பல நூறு ஏக்கர் விளைநிலங்கள் முழுமையாக பாதிக்கப்படும்.

கல்குவாரியில் வைக்கப்படும் வெடியால் விவசாயிகளும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கல்குவாரி அமைய உள்ள இடத்திற்கு அருகில் தனியார் பள்ளி, கோவில்கள் அமைந்துள்ளன. கல்குவாரிக்கான உரிமம் வழங்கக்கூடாது. மீறி கல்குவாரிக்கான அனுமதி வழங்கப்பட்டால் விவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாக்கும் என தெரிவித்தனர்.

Related Stories: