ஆண்டிபட்டியில் ஆடி காற்றுக்கு வாழை இலைகள் நாசம் விவசாயிகள் கவலை

ஆண்டிபட்டி, ஆக.14: ஆண்டிபட்டி பகுதியில் வீசும் ஆடி மாத காற்றினால் வாழை மரங்கள் சாய்ந்தும், இலைகள் கிழிந்தும் வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். ஆண்டிபட்டியை சுற்றி புள்ளிமான் கோம்பை, தர்மத்துபட்டி, டி.அணைக்கரைபட்டி, சீரெங்கபுரம், குன்னூர் உள்ளிட்ட கிராமங்கள் வைகை ஆற்று கரையோரங்களில் அமைந்துள்ளன. இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் மேலாக உள்ளதால் பூ வகைகள் மற்றும் காய்கறிகள் குறிப்பாக வாழையை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.

ஆனால் தற்போது ஆடி மாத காற்று அதிகமாக வீசுவதால் வாழை மரங்கள் ஆடி அசைந்தும், சாய்ந்தும், இலைகள் கிழிந்து தொங்குகின்றன. இதனால் வாழை இலையை நம்பி உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “வாழையை நட்டால், வாழ வைக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப வாழையை நட்டேன். ஆனால் வாழைமரம் வளர்ந்து தார் போடும் சூழலில் காற்றின் வேகம் அதிகரித்து பல நூறு மரங்கள் சாய்ந்து விட்டன. மேலும் இலைகள் கிழிந்து விடுவதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.

Related Stories: