தாந்தோணிமலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பயன்பாடின்றி பழுதடைந்த சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி

கரூர், ஆக. 14: கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் செயல்படாமல் உள்ள சின்டெக்ஸ் டேங்கினை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் தாந்தோணிமலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. 6 பிளாக்குகள் உள்ள இந்த பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் நலன் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தரப்பட்டது. சில ஆண்டுகள் இது பயன்பாட்டுடன் இருந்த நிலையில், தற்போது, மோட்டார் பழுது மற்றும் டேங்கின் நிலையற்ற தன்மை போன்ற பல்வேறு காரணங்களால் செயல்படாமல் உள்ளது.

இதனை சீரமைத்து திரும்பவும் செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.நீண்ட நாட்கள் செயல்பாடு இல்லாத காரணத்தினால், சின்டெக்ஸ் டேங்கை தாங்கி நிற்கும் கான்கிரீட்டும் சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளது. எனவே இதனை பார்வையிட்டு திரும்பவும் செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: