சுதந்திர தினத்தை முன்னிட்டு மாரியம்மன் கோயிலில் ஆக.15ல் பொது விருந்து

ஊட்டி,  ஆக. 14:  ஊட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில் வரும் 15ம் தேதி நடக்கவுள்ள  சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிக்கு பொதுமக்களுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து செயல் அலுவலர்  பெரியமருதுபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர  தின விழாவை முன்னிட்டு வரும் 15ம் தேதி 12.30 மணிக்கு சிறப்பு வழிபாடு  மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இவ்விழாவில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள எம்பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள்  மாவட்ட கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்  பலர் கலந்து கொள்கின்றனர். எனவே, பொதுமக்களும் இந்த சிறப்பு வழிபாடு  மற்றும் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும்.

 அதேபோல், பழை  அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோயில், புது அக்ரஹாரத்தில்  அமைந்துள்ள வேணுகோபால் சுவாமி கோயில், காந்தல் சுப்பிரமணியார்,  மூவுலகரசியம்மன் ஆகிய கோயில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும், இவ்வாறு பெரிய மருதுபாண்டியின் கூறியுள்ளார்.     மேலும் மாரியம்மன் கோயில் சார்பில் அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில்  முன்னாள் ராஜ்யசபா எம்பி., பதவி காலம் முடிந்தது தெரியாமல், முன் வரிசையில்  எம்பி., அர்சுணன் என அச்சிடப்பட்டுள்ளதால், ஆளுங்கட்சியினர் மற்றும்  எதிர்கட்சியினர் கோயில் நிர்வாகத்திற்கு டோஸ் விட்டுள்ளனர். இதனால், தற்போது  கோயில் நிர்வாகம் அழைப்பிதழை பலருக்கும் தராமல், கடிதம் மூலமாக அழைப்பு  விடுத்து வருகிறது.

Related Stories: