குன்னூர் ரேலியா அணையின் நீர்மட்டம் 33 அடியாக உயர்வு

குன்னூர், ஆக. 14:  குன்னூர் ரேலியா அணையின் நீர்மட்டம் 33 அடியாக உயர்ந்துள்ளது.    குன்னூர் நகரில் வசிக்கும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய அணையான ரேலியா அணை உள்ளது.இந்த அணை 43.5 அடி கொள்ளளவு கொண்டது. கடந்த  மே மாதம் இந்த அணையின் நீர்மட்டம் 12 அடிக்கும் கீழே சென்றது. இதனால், மக்கள் தண்ணீரை தேடி பல கி.மீ., செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை சுழற்சி அடிப்படையில், நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர்  மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

இதனால், மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கி வந்தனர். தற்போது கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால், தற்போது ரேலியா அணையின் நீர் மட்டம் 33.9 அடியாக உயர்ந்துள்ளது.   ஆனால் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சியில் முறையான கட்டமைப்பு இல்லாமல் உள்ளது. எனவே குடிநீர் விநியோகம் செய்வதற்கான கட்டமைப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குன்னூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: