காரையூரிலிருந்து பழமுதிர்சோலைக்கு காவடியுடன் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்

பொன்னமராவதி, ஆக.14: பொன்னமராவதி அருகே காரையூரிலிருந்து பாதயாத்திரையாக காவடியுடன் பழமுதிர் சோலைக்கு பக்தர்கள் புறப்பட்டனர்.பொன்னமராவதி அருகே இலுப்பூர் பொன்மாசிநாதர் கோயிலில் இலிருந்து மேலத்தானியம் வழியாக பழமுதிர்சோலையை நோக்கி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் காவடி எடுத்து மேலதாளங்களுடன் மேலத்தானியம் சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். அங்கிருந்து 108 காவடிகளுடன் பழமுதிர் சோலையை நோக்கி புறப்பட்டனர். இக்குழுவானது வரும் சனிக்கிழமை பழமுதிர் சோலையை சென்றடையும். வருடம் தோறும் பாதயாத்திரையாக மதுரை மாவட்டம் மேலும் பக்கம் உள்ள அழகர்கோயில் பழமுதிர் சோலைக்கு சென்று வந்தால் மனநிம்மதி, உடல் ஆரோக்கியம், கடன் தொல்லையில் இருந்து விடுபடுதல் போன்றவை நிறைவேறுகிறது. இதனால் தொடர்ந்து பழமுதிர்சோலைக்கு செல்வதாக பக்தர்கள் தெரிவித்தனர். இதேபோல பொன். மணப்பட்டி நல்லமெய்யன், தொட்டிச்சி சின்னம்மாள், படைப்பு விழா மற்றும் அன்னதானம் நடந்தது.

Related Stories: