அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

புதுக்கோட்டை, ஆக.14: புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் வெங்களப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் ஆடித் திருவிழா கடந்த 6ம்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.தொடர்ந்து விழா நாட்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை முதல் புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் 4ம் வீதியில் உள்ள சுந்தர விநாயகர் கோயிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்திக்கொண்டு கோயிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் திரளான பக்தர்கள் கோயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: