மேலத்தானியம் அடைக்கலங்காத்தார் கோயில் ஆடி மாத சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி, ஆக.14: மேலத்தானியம் அடைக்கலங்காத்தார் கோயிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு நடந்தது.பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் அடைக்கலங்காத்தார் கோவில் ஆடி சிறப்பு வழிபாடு நடந்தது. மேலத்தானியத்தில் அடைக்கலங்காத்தார் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஆடி சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் அடைக்கலங்காத்தார் மற்றும் பரிவார தெய்வங்களான தொட்டிச்சி அம்மன், கொங்காணி சித்தன், சன்னாசி, பட்டாணி ஆகிய தெய்வங்களுக்கு பால், பன்னீர், பழவகைகள் என 16 வகையான சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.மேலும் பக்தர்கள் பொங்கல் வைத்தும், அர்ச்சனை செய்தும் வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பொன்னமராhவதி தாசில்தார் பாலகிருஷ்ணன் மற்றும் மேலத்தானியம், காரையூர் சுற்றுவட்டார கிராம பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: