பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் குளங்கள் தூர்வாரும் பணி துவக்கம்

சிதம்பரம், ஆக. 14: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 41 ஊராட்சிகளில் உள்ள 153 குளங்கள் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளன. குளத்தின் அளவை பொறுத்து ஒரு குளத்திற்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை தூர்வாரும் பணிக்கு செலவு செய்யப்

படுகிறது.

பரங்கிப்பேட்டை ஒன்றியம், கோவிலாம்பூண்டி கிராமத்தில் உள்ள வடகுளத்தில் நேற்று காலை தூர்வாரும் பணியை சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்பி இளங்கோவன், பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவஞானம், சதீஷ்குமார், ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார், பொறியாளர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: