திருச்செந்தூர் சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழாவில் பால்குட ஊர்வலம்

திருச்செந்தூர், ஆக.14:  திருச்செந்தூர் நாடார்தெரு சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா கடந்த 10ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி ஜெயவிநாயகர் மற்றும் சந்தனமாரி அம்மனுக்கு மாக்காப்பு மற்றும் சந்தனகாப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு கோயிலிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதி வலம் வந்து மீண்டும் கோயிலை அடைந்தனர். தொடர்ந்து பகல் 12 மணிக்கு ஜெயவிநாயகர், சந்தனமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஊர்கமிட்டி தலைவர் சண்முகவேல், துணைத்தலைவர் கார்த்தீசன், செயலாளர் ராஜேஷ்குமார், பொருளாளர் பாலகுமார், கமிட்டி உறுப்பினர்கள் செல்வராஜ், சரவணன், ஆனந்தன், மற்றும் கொடை விழா கமிட்டியினர்கள் மற்றும் செந்தில் ஆறுமுகம், மாவட்ட திமுக மகளிரணி துணை அமைப்பாளர் லதாகலைச்செல்வன், கலைச்செல்வன்,  வஉசி துறைமுகம் மணிகண்டபிரபு, ஜெயபாண்டியன், நாட்டாமை,  டென்சிங், முத்துக்குமார், ராஜமோகன், இசக்கிமுத்து, கருணாகரன், பத்மநாபன், ஐடாபிளாரன்ஸ், மாணிக்கம், விஜயரதன், தங்கராஜ் மற்றும் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை 5மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், தொடர்ந்து சந்தனமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.

ஏற்பாடுகளை ஊர் கமிட்டியினர், கொடை விழா கமிட்டியினர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: