நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் புயலால் வீடு இழந்தோர் பட்டியலை இணையத்தில் பதிவு செய்தல் விவாதம்

நாகை, ஆக.14: நாக மாவட்டத்தில் நாளை நடைபெறும் கிராம சபா கூட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கஜா புயலினால் வீடுகளை இழந்த குடும்பங்கள் பட்டியலை ‘ஆவாஸ்ப்ளஸ்’ இணையத்தில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதால் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.நாக மாவட்டத்திலுள்ள 434 கிராம ஊராட்சிகளிலும் நாளை (15ம் தேதி) சுதந்திர தின கிராம சபா கூட்டம் நடைபெறுகிறது.இதில் ஜூன்2019 முதல் ஜூலை 2019 வரை கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை மற்றும் குடிநீர் சிக்கனம் குறித்து விவாதம் செய்யப்படும்.ஊரகப் பகுதிகளில் கொசுக்கள் வாயிலாக உருவாகும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துதல், ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள். 14வது மத்திய மான்ய நிதியினை கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் செலவினம் மேற்கொள்வது. அரசாணை எண் 84ன்படி ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் தடை. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளின் ஆவணங்களை சமூக தணிக்கைக்கு உட்படுத்துதல்.

கழிப்பறை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல். திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக மாற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, பொது சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பராமரிக்கும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு பாராட்டு தெரிவித்தல். பள்ளி கழிவறைகளை சுத்தமாக வைத்திருத்தல்.ஜல் சக்தி இயக்கத்தின் கீழ் நீர் வளம் பாதுகாத்தல் மற்றும் சிக்கனமாக பயன்படுத்துதல். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கஜா புயலினால் வீடுகளை இழந்த குடும்பங்கள் பட்டியலை ‘ஆவாஸ்ப்ளஸ்’ இணையத்தில் பதிவேற்றம் செய்தல். முதல்வரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு ஆகியவை குறித்து விவாதம் நடைபெறும்.

அனைத்து பொதுமக்கள், ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடர்பான விபரங்களை கிராமசபா கூட்டத்தில் விவாதித்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: