மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு டார்ச்சர் ரயில்வே போலீஸ்காரர் உள்பட 5 பேர் மீது வழக்கு

விருதுநகர், ஆக.11: விருதுநகர் அருகே, செந்நெல்குடியை சேர்ந்தர் சக்தீஸ்வரிக்கும் (34). திருச்சி ரயில்வே காவல்நிலைய போலீஸ்காரர் மோகன்ராஜாவுக்கும் (30), கடந்த 2015 நவ.13ல் திருமணம் நடந்தது. அப்போது 25 பவுன் நகை மற்றும் சீர்வரிசைப் பொருட்கள் பெண் வீட்டார் சார்பில் கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பின், திருச்சி ரயில்வே காவலர் குடியிருப்பில் கணவருடன் சக்தீஸ்வரி வசித்து வந்தார். மோகன்ராஜா மனைவியின் நகையை அடகு வைத்து குடித்தும், பாலியல் ரீதியாகவும் அவரை துன்புறுத்தியுள்ளார். மேலும், மாமனார் ஒச்சு (55), மாமியார் கலைச்செல்வி, நாத்தனார்கள் ஹரிப்பிரியா (29), சௌந்தர்யா (27)  சேர்ந்து சக்தீஸ்வரியை அடித்து துன்புறுத்தி, கூடுதல் வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். இதனால், சக்தீஸ்வரி தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், 2019 மே 30ம் தேதி மோகன்ராஜா குடும்பத்தினர் சக்தீஸ்வரியின் வீட்டிற்கு வந்து, அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக சக்தீஸ்வரி புகாரின்பேரில், விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து மோகன்ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: