புதுப்பிக்கபட்ட ரன்னிமேடு ரயில் நிலையம் திறப்பு

குன்னூர்,ஆக.11: புதுப்பிக்கபட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த ரன்னிமேடு ரயில் நிலைய திறப்பு விழா நேற்று நடந்தது.இதற்கு சிறப்பு அழைப்பாளராக டெல்லி ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு மலை ரயில் மூலம் நீலகிரிக்கு வந்தார். வழியில் கல்லார் மற்றும் ஹில்க்ரோ ஆகிய ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து நூற்றாண்டு பழமையான ரன்னிமேடு ரயில் நிலையத்திற்கு வந்த அவரை மலை ரயில் ரத அறக்கட்டளை சார்பில் நடராஜன் மலர் கொத்து வரவேற்றார். பல லட்சம் மதிப்பில் குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டது குறித்து ஆய்வு நடத்தினார். அதனைத் தொடர்ந்து ரன்னிமேடு ரயில் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பின்னர் குன்னூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற தபால் தலை மற்றும் என்.எம்.ஆர். முத்திரை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.  விழாவில் நூற்றாண்டு பழமையான மழை ரயிலின் சிறப்புகள் குறித்து உரையாடினார். இந்நிகழ்ச்சியில் தென்னக ரயில்வே மேலாளர் குல்சேத்ரா உடன் இருந்தார். ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் தொடர்ந்து இரண்டு நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் மலை ரயில் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளார். இன்று ஊட்டி முதல் குன்னூர் வரையிலான ரயில் நிலையங்களில் பார்வையிட உள்ளார்.

Related Stories: