481 உதவி பொறியாளர்கள் பணிக்கு நெல்லையில் 2312 பேர் தேர்வு எழுதினர்

நெல்லை, ஆக 11: தமிழகத்தில் 481 உதவி பொறியாளர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல்  பணி தேர்வு முக்கிய நகரங்களில் நேற்று நடந்தது. நெல்லையில் ராணி அண்ணா அரசு  மகளிர் கல்லூரி, பேட்டை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, மதிதா  இந்துக் கல்லூரி, சாராள் தக்கர் மகளிர் கல்லூரி, கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி, ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரி, ஏகேஒய் பாலிடெக்னிக், நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி, ஜோஸ் மெட்ரிக் பள்ளி, அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி ஆகிய 10 மையங்களில் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வுக்காக 3,713 பேருக்கு  அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டது. காலையில் 2,312 பேர் தேர்வு எழுதினர்.  1401 பேர் தேர்வு எழுத வரவில்லை. பிற்பகலில் 2, 304 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தேர்வு எழுத தகுதியான 38 சதவீதம் பேர் தேர்வு எழுதவில்லை. 62.05 சதவீதம் பேர் மட்டுமே காலை, மாலை ஆகிய 2 வேளைகளிலும் நடந்த தேர்வை எழுதினர். தேர்வை முன்னிட்டு அனைத்து மையங்களிலும்  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: