மதுகடத்திய காரை பைக்கில் துரத்தி சென்ற போலீஸ்காரர் மீது கார் மோதியது

வானூர், ஆக. 11:  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள அனிச்சங்குப்பத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை அப்பகுதியில் புதுச்சேரியிலிருந்து வந்த காரை போலீஸ்காரர் செல்வம்(36) உள்ளிட்டோர் நிறுத்த முற்பட்டனர். போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்தாமல் கீழ்புத்துப்பட்டு வழியில் செல்ல முயன்றார். அப்போது செல்வம் காரை பின்தொடர்ந்து பைக்கில் சென்றார். அவர் வருவதை கண்ட மது கடத்திய வாகனத்தின் ஓட்டுநர் வேகமாக திண்டிவனம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

தைலாபுரம் அருகே வி.கேணிப்பட்டு புறவழிச்சாலையில் சென்றபோது அந்த வாகனத்தை பின்தொடர்ந்த செல்வத்தை பின்னால் வந்த கார் மோதியது. இதில் செல்வத்தின் கால் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். செல்வத்தின் மீது மோதிய கார் சிதம்பரம் பகுதியை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் சொந்த கார் என்பதும் அவர் குடும்பத்துடன் சென்னை நோக்கி செல்லும்போது விபத்து ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தின்போது மதுகடத்திய கார் நிற்காமல் சென்றுவிட்டது. சம்பவம் குறித்து கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுகடத்தி நிற்காமல் சென்ற காரை தேடி

வருகின்றனர்.

Related Stories: