கள்ளக்குறிச்சியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் மறியல்

கள்ளக்குறிச்சி, ஆக. 11: கள்ளக்குறிச்சி நகராட்சி 2 வது வார்டு வஉசிநகர்

6 வது மற்றும் 7 வது குறுக்கு தெரு பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் குடிநீர் பயன்படுத்துவதற்கு அதே பகுதியில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் ஆழ்குழாய் கிணறுடன் மினி டேங்க் ஒன்று மட்டும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மினி டேங்கில் இருந்து அப்பகுதி மக்கள் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.தொடர் வறட்சியால் ஆழ்குழாய்கிணற்றில் நீர் ஊற்று முற்றிலும் குறைந்தது.இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.மேலும் தெரு பைப்லைன் மூலம் நகராட்சி நிர்வாகம் கூட்டுகுடிநீர் வழங்கப்பட்டு வந்ததும் தற்போது சரிவரவழங்கபடவில்லை இதனால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்தது.

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கிட டிராக்டர் மூலம் இலவச குடிநீர் வழங்க வேண்டி நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள்பலமுறை வலியுறுத்தியும் இதுவரைஎந்தநடவடிக்கையும் எடுக்க முன்வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் காலி குடங்களுடன்  கச்சிராயபாளையம் சாலை பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுபற்றிதகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று பொதுமக்களிடம் சமாதானம் செய்து தடையில்லா குடிநீர் வழங்கநடவடிக்கை எடுப்பதாகஉறுதியளித்தனர்.அதனையேற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: