திரளான பக்தர்கள் பங்கேற்பு மரங்கள் வளர்க்க மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்

கந்தர்வகோட்டை, ஆக.11: கந்தர்வகோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்களது வீடுகளிலும், சுற்றுப்புறங்களிலும் மரங்களை வளர்க்க ஆர்வம் காட்ட வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி பேசினார்.கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டாய்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி கலந்துக் கொண்டு இறைவணக்க கூட்டத்தில் பேசியபோது, இந்த பள்ளி வளாகத்தில் அதிகளவில் மரங்கள் இருப்பதால் மரங்கள் அதிகளவு நிழலை கொடுப்பதால் வெயிலின் தாக்கம் இன்றி நிற்க முடிகிறது. இதனை நேரடியாக உணரும் மாணவர்களாகிய நீங்கள் உங்களது வீடுகளிலும், வசிக்கும் பகுதிகளிலும் அதிகளவில் மரங்களை நட்டு அவற்றை பராமரிக்க வேண்டும். அதிகளவில் ஆர்வம் காட்ட வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். பள்ளியில் சாதி மத வேறுபாடின்றி இருக்க வேண்டும். பெற்றோர்களின் சொல்படியும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று வாழ்வில் உயர்ந்து சமூகத்திற்கு பயன்படவேண்டும், நாட்டின் உயர்ந்த நிலையை அடைவதே உங்களுக்கான தேடலாக இருக்க வேண்டும் என பேசினார். பள்ளி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: