தாமத பிறப்பு, இறப்பு சான்றிதழ் விண்ணப்பங்களுக்கு உத்தரவு

புதுச்சேரி, ஆக. 8:  புதுச்சேரி உள்ளாட்சித்துறை இயக்குநர் மலர்க்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் பிறப்பு/ இறப்பு நிகழ்வுகள் மத்திய பிறப்பு மற்றும் இறப்பு சட்டம் 1969ன் பிரிவு 8 உடன் புதுச்சேரி பிறப்பு மற்றும் இறப்பு விதிகள் 1999ன் பிரிவு 8(1)(ஏ-இ)ன் 30 நாட்களுக்குள் அந்தந்த பகுதியில் உள்ள நகராட்சி/ கொம்யூன் பஞ்சாயத்து பதிவாளர் மூலமாக பதிவு செய்யப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் 30 நாட்களுக்கு மேல் ஒரு வருடத்திற்குள்ளாக தாமதமாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் தலைமை பதிவாளரின் (பிறப்பு/இறப்பு) பரிசீலனைக்கு பிறகு புதுச்சேரி பிறப்பு மற்றும் இறப்பு விதிகள் 1999ன் பிரிவு 9(2)ன் கீழ் உரிய ஒப்புதல் பெறப்பட்டு பதிவு செய்யப்படும். ஒரு வருடத்திற்கு மேல் தாமதமாக விண்ணப்பிப்பவர்கள், பிறப்பு மற்றும் இறப்பு சட்டம் 1969 (மத்திய சட்டம் 18/1969) பிரிவு 13(2) உடன் புதுச்சேரி பிறப்பு மற்றும் இறப்பு விதிகள் 1999ன் பிரிவு 9(3)ன் கீழ் நீதிமன்ற ஆணை பெற்று பதிவு செய்திட வேண்டும்.

அதன்படி, இவ்வாறான தாமதப்பதிவு விண்ணப்பங்கள் அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் சமர்ப்பிக்கப்பட்டு அதன்பின் உள்ளாட்சி துறையின் உரிய பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது. அவ்வாறு புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகள், அரியாங்குப்பம், பாகூர், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துகள் ஆகிய உள்ளாட்சி அலுவலகங்களில் 25-7-2019 வரை பெறப்பட்ட 37 விண்ணப்பங்கள் உரிய பரிசீலனைக்கு பிறகு தலைமை பதிவாளர் ஒப்புதலினை பெற்று உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனவே, விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி/ கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தினை அணுகி உரிய பதிவுகளை பெற்றுக் கொள்ளுமாறு

கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: