6 இடங்களில் நாளை சிறப்பு குறைதீர் முகாம் மக்களுக்கு அழைப்பு

அரியலூர், ஜூலை 25: அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் சிறப்பு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் 7வது கட்டமாக அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில் வட்டத்துக்கு இரண்டு கிராமத்திலும், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் சிறப்பு குறைதீர் முகாம் நாளை நடக்கிறது. தாசில்தார்கள் தலைமை வகிக்கின்றனர்.அதன்படி அரியலூர் வட்டத்தில் பெரியநாகலூர், கோவிலூர் ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் பருக்கல் (கிழக்கு), தழுதாழைமேடு ஆகிய கிராமங்களிலும், செந்துறை வட்டத்தில் ஆலத்தியூர் கிராமத்திலும், ஆண்டிமடம் வட்டத்தில் ராமன் கிராமத்திலும் முகாம் நாளை நடக்கிறது.முகாமில் வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Related Stories: