குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய 290 பேர் மீது வழக்கு வாகன சோதனையை தீவிரப்படுத்த எஸ்.பி. உத்தரவு

நாகர்கோவில், ஜூலை 24:  குமரி மாவட்டத்தில் வாகன விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என எஸ்.பி. நாத் உத்தரவிட்டுள்ளார். ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்கள் மீது தினமும் வாகன சோதனை நடத்தி, வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 300 பேர் முதல் 400 பேர் வரை ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி வந்து, போலீசாரிடம் சிக்கி அபராதம் செலுத்துகிறார்கள். அந்த வகையில் நேற்று முன் தினம் மாவட்டம் முழுவதும் நடந்த வாகன சோதனையில் போக்கு வரத்து விதிமுறை மீறியதாக, மொத்தம் 446 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதில் நாகர்கோவில் சரகத்தில் 19 பேரும், தக்கலையில் 122 பேரும், குளச்சல் சரகத்தில் 240 பேரும், கன்னியாகுமரி சரகத்தில் 65 பேரும் சிக்கினர். இதில் ஹெல்மெட் வழக்குகள் மொத்தம் 290 ஆகும். போலீசாரின் சோதனையை தொடர்ந்து ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் காலை மற்றும் மாலை வேளையில் தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்படும் என போலீசார் கூறி உள்ளனர்.

Related Stories: