பெர்மிட் இல்லாமல் இயங்கிய பள்ளி வேன் பறிமுதல்

பெருந்துறை, ஜூலை 24:பெருந்துறை அருகே பெர்மிட் இல்லாமல் இயங்கிய பள்ளி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள மேட்டுக்கடை பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப் பள்ளியில், பயிலும் மாணவ, மாணவிகளை அழைத்து வர பள்ளிக்கு சொந்தமாக 7 வேன் உள்ளது.நேற்று முன்தினம் பெருந்துறை பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி ஆய்வு மேற்கொண்டார். இதில், இந்த பள்ளி வேனின் பர்மிட் வேறு ஒரு தனியார் பள்ளி வாகனத்தின் பெயரில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வேனை பறிமுதல் செய்த போக்குவரத்து அதிகாரிகள் பள்ளியில் மீதமுள்ள ஆறு வேன் பெர்மிட்டையும் ஆய்வு செய்தனர். இதில், அனைத்து வேன்களின் பெர்மிட்டும் வேறு பள்ளி வாகனத்தின் பெர்மிட் என தெரியவந்தது. இதனால், 6 வேன்களையும் இயக்க கூடாது என தடை விதித்தனர். பெருந்துறை வட்டாரத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் வேன் மற்றும் பேருந்துகளில் ஆய்வு மேற்கொள்ள மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக ஆர்டிஓ வெங்கட்ரமணி தெரிவித்தார்.

Related Stories: