போதை பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண்

கோவை, ஜூலை 24: மேற்கு மண்டல காவல்துறையில் போதை பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண்ணை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் கஞ்சா, புகையிலை ஆகிய போதை பொருள்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள பெட்டிக்கடைகள், மளிகை கடைகள் ஆகியவற்றில் சோதனை செய்து போதை பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் கஞ்சா போன்ற போதை பொருள்களை விற்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் போதை பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண்களை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா அறிவித்துள்ளார். அதன் படி கோவை மாவட்டத்திற்கு 77081 00100, ஈரோடு 89397 79100, திருப்பூர் 94981 01320, நீலகிரி 86080 00100, சேலம் 94459 78599, நாமக்கல் 94981 01020, தர்மபுரி 94456 52253, கிருஷ்ணகிரி 97152 55248 ஆகிய எண்களில் பொதுமக்கள் வாட்ஸ் ஆப் மூலம் தகவல்களை அனுப்பலாம் என மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா தெரிவித்துள்ளார்.

Related Stories: