பாலமேடு அரசு பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான அ.குறுவட்ட போட்டி

அலங்காநல்லூர், ஜூலை 24: பாலமேட்டில் பள்ளி மாணவர்களுக்கான அ.குறுவட்ட போட்டி துவங்கியது. இதில் ஆர்வத்துடன் மாணவர்கள் செஸ் விளையாடினர்.மதுரை மாவட்டம் பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 2019-20ம் கல்வி ஆண்டுக்கான அ.குறுவட்ட போட்டிகள் சதுரங்க விளையாட்டுடன் தொடங்கியது. இதில் தலைமை ஆசிரியர் ஜான்பாக்கியம், பாலமேடு கிராம மகாலிங்க மடத்துகமிட்டி செயலாளர் வேலு, பொருளாளர் மனோகரவேல்பாண்டியன், பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் ராமராஜ் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.

இதில் 11 வயது, 14 வயது, 17 வயது, 19 வயது என தனித்தனி பிரிவுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 206 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் செஸ் விளையாடினர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 24 மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சந்தர்சிங், தெய்வசிகாமணி, கலாராணி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: