மதுரையில் துவங்கியது தென்மண்டல கால்பந்து போட்டி ஜெர்மனியில் உலக தர பயிற்சி கிடைப்பதால் வீரர்கள் ஆர்வம்

மதுரை, ஜூலை 24: மதுரையில் தென்மண்டல அளவிலான கால்பந்து போட்டி நேற்று துவங்கியது. இப்போட்டியின் மூலம் ஜெர்மனியில் உலகதர பயிற்சி கிடைக்கும் என்பதால் வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.ஜெர்மன் கலாச்சார மையம் சார்பில் தமிழகத்தை மதுரை, திருச்சி, கோவை மற்றும் சென்னை என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல அளவிலான கால்பந்தாட்ட போட்டி திருச்சியில் நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தென் மண்டல அளவிலான போட்டி நேற்று துவங்கியது. இதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட 9 மாவட்டங்களில் இருந்து ஆண், பெண் என 24 அணிகள் கலந்து கொண்டன. 16 வயதுக்குட்பட்டோருக்காக நடந்த போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் துவக்கி வைத்தார். நாக்அவுட் முறையில் போட்டி நடந்து வருகிறது.

இறுதிப்போட்டியில் வென்று தேர்வு செய்யப்படும் சிறந்த அணி, ஜெர்மன் நாட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்டு, அங்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் தனித்துவமாக அசத்தும் வீரர்களுக்கு ஜெர்மனியில் உள்ள கால்ப்பந்து கிளப்பில் ஆடும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கிடைப்பதால் வீரர்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.

கடந்த ஆண்டு நடந்த போட்டியில் இறுதி ஆட்டத்தில் வென்ற பெண்கள் அணியை ெஜர்மனிக்கு அழைத்துச்சென்று பயிற்சி வழங்கியுள்ளனர். மேலும் நாமக்கல்லை சேர்ந்த மாரியம்மாள் உலக பெண்கள் கால்பந்து போப்பைக்கான போட்டியில் விளையாட தேர்வு பெற்றார்.

மதுரை, நெல்லை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட அணிகள் நேற்று மோதின. இப்போட்டி வரும் 24ம் தேதி வரை நடைபெறுகிறது.

Related Stories: