ரெட்டியார்சத்திரம் சுரக்காய்பட்டியில் குப்பை கிடங்கான பயணிகள் நிழற்குடை

செம்பட்டி, ஜூலை 24: ரெட்டியார்த்திரம் அருகே தருமத்துபட்டியில் குப்பை கிடங்கான நிழற்குடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், தருமத்துபட்டி ஊராட்சிக்குட்பட்டது சுரைக்காய்பட்டி. இங்கு சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். செம்பட்டி- ஒட்டன்சத்திரம் சாலையில் இவ்வூருக்கான பயணிகள் நிழற்குடை உள்ளது. இதனை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் இருப்பதுடன் தன்பங்கிற்கும் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அதாவது ஊராட்சி நிர்வாகம், குப்பை வண்டிகளை பார்க்கிங் செய்ய இந்த நிழற்குடையை தான் பயன்படுத்தி வருகிறது. மேலும் டீக்கடைக்காரர்கள் தென்னை மட்டை விறகுகளை நிழற்குடையில் குவித்து வைத்து குப்பை கிடங்காக மாற்றி விட்டனர். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் கடும் வெயில் மற்றும் மழையில் நின்று ஏறி செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய நடவடிக்கை எடுத்து சுரைக்காய்பட்டி நிழற்குடையை  பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: