திண்டுக்கல்லில் மனநலம் பாதித்து திரிந்தவர்கள் மீட்பு

திண்டுக்கல், ஜூலை 24: திண்டுக்கல்லில் மனநலம் பாதித்து திரிந்தவர்களை மீட்டு மறுவாழ்வு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சுற்றித்திரிந்த வண்ணம் இருந்தனர். இதனை கண்ட மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி இவர்களை மீட்டு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் தலைமையில், நிலக்கோட்டை எம்.எஸ். செல்லமுத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நேற்று திண்டுக்கல் பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டு திரிந்த 6 பெண்கள், 2 ஆண்களை மீட்டனர். தொடர்ந்து அவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மனநலம் பாதிக்கப்பட்டது உறுதியளித்தன்பேரில் அவர்களை நிலக்கோட்டையில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவம், மறுவாழ்வு அளிக்கும் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. பின்னர் அவர்கள் சுயநினைவுக்கு திரும்பியவுடன் அவரவர் குடும்பங்களில் சேர்க்கப்படுவர் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: