சங்க மாநில தலைவர் சஸ்பெண்டை கண்டித்துஊரக வளர்ச்சி துறையினர் உள்ளிருப்பு போராட்டம்

குஜிலியம்பாறை, ஜூலை 24:  அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு வட்டார தலைவர் வசந்தா தலைமை வகிக்க, ஒன்றிய பிடிஓக்கள் முருகன், முத்துக்குமரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் வீரகடமபகோபு, மாவட்ட இணை செயலாளர் நாச்சிமுத்து, வட்டார செயலாளர் பெருமாள் உள்பட 45க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த  போராட்டத்திற்கு வட்டார தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட துணை தலைவர் சக்திவடிவேல் முருகன், மாநில இணை செயலாளர் எழில்வளர் உள்பட 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த  போராட்டத்திற்கு வட்டார தலைவர் அருண்பிரசாத் தலைமை வகிக்க, வட்டார செயலர் தெய்வம் முன்னிலை வகித்தார். ஆரம்பப்பள்ளி கூட்டணி வட்டார செயலர் டியோனி வாழ்த்துரை வழங்கினார். இதில் ஓய்வூதியர்கள் சங்க தலைவர் கணேசன், ஜாக்டோ ஜியோ நிதிக்குழு மோசஸ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரவேல், மனோகர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, பேரின்பமணி, செந்தில்குமார், ஊராட்சி செயலர்கள் திருப்பதி, பாலாஜி, சிவராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த  போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணை தலைவர் குப்புசாமி தலைமை வகிக்க, வட்டார தலைவர் ராஜசேகர், செயலாளர் இளையராஜா முன்னிலை வகித்தனர். பொருளாளர் கர்ணன் வாழ்த்துரை வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயசந்திரிகா, முகமது அப்துல் மாலிக், குப்புசாமி, வட்டார இணை செயலாளர் ராஜேஸ், வட்டார துணை தலைவர் முகமது இஸ்மாயில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோதரன், சாந்திதேவி, டெய்சி ப்ளோரா, ஏஞ்சலின் மார்த்தாள், ஊராட்சி செயலாளர்கள் ராஜேந்திரன், ஜெரால்டு மனோகரன், முருகன், ஆறுமுகம், ராகவன், பிளவேந்திரன், சாத்தப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு வட்டார தலைவர் வாசுகி தலைமை வகிக்க, மாவட்ட இணை செயலாளர் ஆரோக்கிய ஜார்ஜ் முன்னிலை வகித்தார். இதில் 49 பேர் பங்கேற்றனர். முன்னதாக நேற்று காலை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டனர். தொடர்ந்து பணிகளை புறக்கணித்து அலுவலகம் முன்பு அமர்ந்து அரசு ஊழியர் சங்கம் மாநில தலைவரும், ஜாக்டோ ஜியோ தலைமை ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணி பணி ஓய்வு நாளின் போது, பழிவாங்கும் நோக்கில் கடந்த 31.5.2019ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தமிழக அரசின் இச்செயலை கண்டிக்கிறோம், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் எனவும், இதுகுறித்து தென்காசியில் நடக்கும் மாநில மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும் கோஷமிட்டனர். இப்போராட்டத்தினால் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories: