எட்டெக் ரிவ்வியூ மாநாட்டில் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் பங்கேற்பு

சேலம், ஜூலை 24: சென்னையில் நடைபெற்ற எட்டெக் ரிவ்வியூ மாநாட்டில் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் டாக்டர் செந்தில்குமார் பங்கேற்று பேசினார்.எட்டெக் ரிவ்வியூ என்பது உயர்கல்வி முறையில் உள்ள புதுமையான கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை பற்றி கல்வி தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் அறியவும், தங்களது கருத்துக்களை பகிரவும் உதவும் ஓர் முன்னணி ஊடகமாகும். இதன் முக்கிய நோக்கம் ஆண்டுதோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் “உயர் கல்வியியல்” குறித்த மாநாட்டை நடத்துவதாகும். மேலும், சிறந்த செயல்திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் உயர்கல்வியின் வளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்துவது என்பதும் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.இவ்வாண்டிற்கான மாநாடு கடந்த 18ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில், விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் டாக்டர். செந்தில்குமார் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு, “உயர்கல்வியியலில் தொழில்முனைவோர் மற்றும் புதுமைகளை ஆதரித்தல்” என்ற தலைப்பின் கீழ் விளக்கி பேசினார். இம்மாநாட்டில் பல்வேறு கல்வி தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: