சேலம் மாவட்டத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சேலம் ஜூலை 24: சேலம் மாவட்டத்தில் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் தினமும் சராசரியாக 75முதல் 100 பேர்,  சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் முதலிடத்தில் இருப்பது நாய் வளர்ப்பு. சமீபத்திய கணக்ெகடுப்பின் படி தமிழகம் முழுவதும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளதாகவும், இதில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களின் எண்ணிக்கை மட்டும் 10 சதவீதம் என்று தகவல்கள் ெதரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இனப்பெருக்கத்தால் தெருவில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்ைக அதிகமாக இருப்பதாகவும், இவற்றால் பல்வேறு அசம்பாவிதங்கள் நடப்பதாகவும் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இதில் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை வெறிநாய்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. ேசலம் அரசு மருத்துவமனையில் மட்டும் தினமும் சராசரியாக 75முதல் 100 பேர் வரை, வெறிநாய் கடித்த நிலையில் சிகிச்சைக்கு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களும், தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களும், பெரும்பாலும் குப்பைகளில் வீசப்படும் கழிவுகள் மற்றும் ஆடு, கோழி இறைச்சி கழிவுகளை அதிகளவில் உண்ணுகிறது. ெதாடர்ச்சியாக இறைச்சி கழிவுகளை உண்பதால் அவற்றின் குணத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்தாத நிலையில் வெறிநாயாக மாறி விடுகிறது. இது போன்ற நாய்கள், சாலைகளில் நடந்து செல்பவர்களை கடித்தும் மற்றும் துரத்தியும் வருகிறது. இதில் பள்ளி குழந்தைகள், பெண்கள் மற்றும் வண்டிகளில் செல்வோர் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் சராசரியாக தினமும் 75 முதல் 100 பேர், வெறிநாய்கடிக்கு சிகிச்சை பெற வருகின்றனர். இப்படி வருபவர்களுக்கு தடுப்பூசி மற்றும் மருந்து, மாத்திரை வழங்கப்படுகிறது. எனவே தெருக்களில் அல்லது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டும். கால்நடை மருத்துவமனைகளில் வெறிநாய் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. நாய்கடியை பொறுத்தவரை கடிப்பட்ட அளவை பொறுத்து அதன் தாக்கம் இருக்கும். நாய்களின் பற்கள் அதிகளவில் ஆழமாக பதிந்திருந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும். கடிபட்டவர்கள் உடனடியாக நோய் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். நாய் கடித்த இடத்தில் முதலில் கிருமிகளின் எண்ணிக்கையை குறைக்க உடனே சோப்பு நீரால் பலமுறை நன்கு கழுவ வேண்டும்,’’ என்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘பிராணிகள் வதை தடுப்பு சட்டம், சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை கொல்லக்கூடாது என்று சொல்கிறது. இதனால் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து வீராணம் அருகில் உள்ள கருத்தடை மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு வாரத்திற்கு 15 நாய்கள் வரை கருத்தடை செய்யப்படுகிறது. பின்னர் நாய்களை பாராமரித்து வேறு ஒரு இடத்தில் விடப்படுகிறது. இதே போல் நாய்க்கடி பாதிப்புகளை தவிர்ப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.

Related Stories: