களங்காணி அரசு பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு

சேந்தமங்கலம், ஜூலை 24: நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம், களங்காணி ஆதிதிராவிட நல அரசு மேல்நிலைப்பள்ளியில், வினைதீர்த்தபுரம் வட்டார ஆரம்ப சுகாதர நிலையம் சார்பில், மக்கள்தொகை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் மோகன்குமார்  தலைமை தாங்கினார். மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.  இதில் வட்டார மருத்துவ அலுவலர் அமுதா கலந்துகொண்டு மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்களிடைய விளக்கி பேசினார். இதையெடுத்து மக்கள் தொகை குறித்து கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக மக்கள் தொகை விழிப்புணர்வு உறுதிமொழி, பேரணி நடைப்பெற்றது. இதில் உதவித் தலைமையாசிரியர் வாசுதேவன், சுகாதார மேற்பார்வையாளர்கள் ராஜேந்திரன், புவனேஸ்வரன், ஜானகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: