ஓசூரில் சிறை கைதிகள் மறுவாழ்விற்காக 1000 புத்தகங்கள் வழங்கல்

ஓசூர், ஜூலை 24: ஓசூரில் கிளைச்சிறையில் உள்ள கைதிகளின் மறுவாழ்விற்காக, 1000 புத்தகங்கள் வழங்கப்பட்டது.ஓசூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம், பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து புத்தகத் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன. நடப்பாண்டும் 8ம் ஆண்டாக புத்தக திருவிழா நடந்து வருகிறது. நேற்று தயா அறக்கட்டளை சார்பில், ராகவன் மற்றும் ஓசூர் புத்தக திருவிழா நிர்வாகிகள் இணைந்து, ஓசூர் கிளைச்சிறை அதிகாரி கோவிந்தசாமியிடம் 1000 புத்தகங்களை வழங்கினர்.  சிறையில் உள்ள கைதிகள், கோபத்தினாலும், மன ரீதியாக பாதிக்கப் படுவதால், அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில், முக்கிய நூல்கள் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. ஒரு நூலகம் திறக்கப்பட்டால், ஆயிரம் சிறைகள் மூடப்படும் என்னும் தலைப்பில் தயா அறக்கட்டளை சார்பில் சிறை கைதிகளுக்காக ஆயிரம் புத்தகங்களை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துரை, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், செயலாளர் பாலகிருஷ்ணன், பாஜ மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: