தேசிய அளவிலான போட்டிகளில் சூளகிரி மாணவர்கள் சாதனை

சூளகிரி, ஜூலை 24: கோவாவில் யூத் ஓவர்ஆல் கேம்ஸ் அசோசியேசன் சார்பில், தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற்றன. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், இந்தியன் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் பவித்ராமன் தலைமையில் கபடி, சிலம்பம் மற்றும் குங்ஃபூ போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் கபடி போட்டியில் மாணவர்கள் ராமன், சுரேஷ்பாபு, தனசேகர், பசவராஜ், தமிழ் எழில் வேந்தன், விஜயகுமார், வினோத்குமார், பாலாஜிகுமார், சூரியபிரகாஷ் ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர். சிலம்பத்தில் பெண்கள் பிரிவில் ஸ்வேதா ஸ்ரீ, வித்யா, வைஷ்ணவி, காவியா, ரஞ்சினி ஆகிய மாணவிகள் தங்க பதக்கத்தையும், ரூபா, மகேஸ்வரி, குமுதவள்ளி ஆகிய மாணவிகள் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர். சிலம்பம் ஆண்கள் பிரிவில் தரஸ்வின், ஸ்ரீஹரிராம்ப்ரியன் ஆகிய மாணவர்கள் தங்க பதக்கத்தை வென்றனர். இதேபோல் குங்ஃபூ போட்டியில் மாணவன் பார்த்திபன் தங்க பதக்கத்தையும், ஸ்ருஜன் மற்றும் சூரியபிரகாஷ் ஆகியோர் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. சாதனை படைத்த  சூளகிரி பகுதி மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories: