தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப்பள்ளி எல்கேஜி வகுப்பில் 100 மாணவர்கள்

ஓசூர், ஜூலை 24: ஓசூர் அடுத்த பேடரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தனியார் பள்ளிக்கு நிகராக எல்கேஜி வகுப்பில் 100 மாணவர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியம் பேடரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நடப்பு 2019-20 கல்வியாண்டில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகள் தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே 100 மாணவர்கள் சேர்ந்து, அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்தியுள்ளனர். இதனை பாராட்டு விதமாக, நூலகத்துறை நடத்திய ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் ஓசூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் சீனிவாசரெட்டி ₹140 மதிப்புள்ள பாடப்புத்தகங்களை எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர்கள் 100 பேருக்கு இலவசமாக வழங்கினார். மேலும், மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளியில் எல்கேஜி மற்றும் யுகேஜி பயிற்சி வகுப்புகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்ற ₹10 ஆயிரம் நன்கொடை வழங்கினார்.  தொடர்ந்து ஓவியப்போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு நூலகர் கல்பனா பரிசுகளை வழங்கினார். இதில், ஓசூர் வட்டார கல்வி அலுவலர் கோவிந்தப்பா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லக்கப்பா, உறுப்பினர் சின்னாரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவர்களை பாராட்டிகள். பள்ளி தலைமையாசிரியர் பொன்.நாகேஷ் நன்றி கூறினார்.

Related Stories: