சந்தூர் முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது

போச்சம்பள்ளி, ஜூலை 24: போச்சம்பள்ளி தாலுகா சந்தூர் கிராமத்தில் மாங்கனி மலை  வேல் முருகன் வள்ளி தேவசேனா சமேத கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை விழா வெகுவிமரிமையாக நடைபெறும். அதன்படி வரும் ஆடி 10ம் நாள் 50ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா நடைபெறுகிறது.இதை முன்னிட்டு நேற்று முன்தினம் கொடியேற்று விழா நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. 25ம் தேதி இரவு 7 மணிக்கு ஸ்ரீ வேல்முருகன் பூ பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு நகர்வலம் வருதல், சிலம்பாட்டம், காவடி ஆட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நாளான 26ம் தேதி காலை 7 மணியளவில் சந்தூர் மாரியம்மன் கோயில் அருகில் ஸ்ரீ வீரபத்திர சுவாமி பக்தர்களின் சேவ ஆட்டம் நிகழ்ச்சியும், பக்தர்கள் தலைமீதும், காளை மாட்டின் தலை மீதும் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தும் நிகழ்ச்சியும், மதியம் 2 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது. இதனைத் தொடர்ந்து 27ம் தேதி காலை 10.30 மணிக்கு முருகன் வள்ளி தேவசேன சமூக திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்களும், இந்துசமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

Related Stories: