விவசாய நிலத்தில் உள்ள முள்வேலியை அகற்ற பொதுமக்கள் மனு

கிருஷ்ணகிரி, ஜூலை 24: ஓசூர் அருகே விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாமல் அமைக்கப்பட்டுள்ள முள்வேலியை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.ஓசூர் ஒன்றியம் நாகொண்டப்பள்ளி ஊராட்சி இடையநல்லூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், சூடகொண்டப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சாக்கப்பா தலைமையில் கலெக்டர் பிரபாகரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இடையநல்லூர் கிராமத்தில் விவசாயம் செய்யும் நிலத்தில், சிலர் நிலம் வாங்கியுள்ளனர். அவர்கள் மற்ற விவசாய நிலங்களுக்கு தங்கள் ஆடு, மாடுகளை அழைத்து செல்ல வழி விடாமல் முள்வேலி அமைத்துள்ளனர். அவ்வாறு முள்வேலி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் அரசு நடைபாதை மற்றும் வண்டிபாதையையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், மற்ற விவசாயிகள் தங்கள் நிலங்களை உழவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி, விவசாயிகள் பாதிக்காத வகையில், நடைபாதை மற்றும் வண்டிபாதையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: