காரிமங்கலம் சந்தையில் ஆடு, மாடு விற்பனை ஜோர்

காரிமங்கலம், ஜூலை 24: காரிமங்கலம் சந்தையில் ₹38லட்சத்திற்கு ஆடு மற்றும் மாடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். காரிமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை கூடுகிறது. நேற்று நடந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆடு, மாடுகளை ஓட்டி வந்திருந்தனர். தவிர, தேங்காய் மற்றும் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடு, மாடுகளை வாங்க வியாபாரிகள் வந்திருந்தனர். சந்தையில் மாடு ₹20 ஆயிரம் முதல் ₹25 ஆயிரம் வரையிலும்,  ₹28 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.  அதுபோல் ஆடு ₹4 ஆயிரம் முதல் ₹5ஆயிரம் வரை ₹10லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தேங்காய் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. தேங்காய் ஒன்று  ₹9 முதல் ₹12 வரையிலும்  ₹3லட்சத்துக்கு விற்பனையானது. மேலும் தக்காளி கிலோ ₹35க்கும், பீன்ஸ் கிலோ ₹90க்கும், அவரைக்காய் கிலோ ₹80க்கும், முட்டைக்கோஸ் கிலோ ₹30க்கும், கத்தரி கிலோ ₹40க்கும், வெண்டை கிலோ ₹40க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: