டாஸ்மாக் கடையை மாற்ற கலெக்டரிடம் பாஜக மனு

தர்மபுரி, ஜூலை 24: தர்மபுரி நகர பஸ் ஸ்டாண்ட் அருகே, 2 டாஸ்மாக் கடைகளை மாற்ற வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.தர்மபுரி பாஜக சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி நகர பேருந்து நிலையம் எதிரில், அப்துல்முஜிப்தெருவில் ஒரே இடத்தில் 2 டாஸ்மாக்கடைகள் செயல்படுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள், பள்ளி மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த இரண்டு கடைகளையும் வியாபாரிகள், பொதுமக்கள், மாணவிகளின் நலன்கருதி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: