காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரி முன் சாலையை கடக்க நடை மேம்பாலம்

காரிமங்கலம், ஜூலை 24:  காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரி முன், சாலையை கடந்து செல்ல, நடை மேம்பாலம் அமைக்க ேவண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரிமங்கலம் அருகே நாகனம்பட்டி பிரிவு சாலையில், அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், 1,500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இதன் சுற்று வட்டார பகுதிகளான தர்மபுரி, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, மற்றும் காவேரிப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவிகள் பஸ்களில் வந்து செல்கின்றனர். இக்கல்லூரி அமைந்துள்ள பகுதி தேசிய நெடுஞ்சாலையான நான்கு வழிப்பாதை என்பதால், இவ்வழியில் எப்போதும் அதிவேகமாக வாகன போக்குவரத்து காணப்படும்.

இந்நிலையில் கல்லூரி மாணவிகள் சாலையை கடந்து சென்று பஸ்களில் ஏறி, இறங்க ேவண்டிய நிலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலை என்பதால், மாணவிகள் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. கல்லூரி தொடங்கி 3 ஆண்டுகளாகியும், நிழற்கூடமும் அமைக்கப்படவில்லை. மாணவிகள் கடந்து செல்லும் பாதை என எச்சரிக்கை பலகைகளும் அமைக்கப்படவில்லை. இதனால் மாணவிகள் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே வேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்தவும், மாணவிகள் சாலைகளை எளிதாக கடந்து செல்ல நடை மேம்பாலம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: