30அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் பேரணி

தர்மபுரி, ஜூலை 24: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர், 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்மபுரியில் பேரணி நடத்தினர். தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், சந்தைப்பேட்டை வேல்பால்டிப்போ அருகே பேரணி நடந்தது. பேரணி பெரியார் சிலை, கடை வீதி வழியாக பிஎஸ்என்எல் அருகே முடிந்தது. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார் வரவேற்றார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தனசேகரன் முன்னிலை வகித்தார். டாஸ்மாக் மாநில செயலாளர் முருகேசன் பேரணியை தொடங்கி வைத்தார்.டாஸ்மாக் மாநில துணை தலைவைர் முத்துக்குமரன் வாழ்த்தி பேசினார். அரசு பணியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் கிருஷ்ணன், மாநில பிரசார செயலாளர் சுகமதி ஆகியோர் ேபரணியை முடித்து வைத்து பேசினர். பேரணியில், டிஎன்சிஎஸ்சிக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். நியாயவிலைக்கடைக்கு என தனி துறை ஏற்படுத்த வேண்டும். பணிவரன்முறை படுத்த வேண்டும். உணவு பொருட்கள் அனைத்தையும், பொட்டல முறைக்கு மாற்ற வேண்டும். அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் ஜான்ஜோசப்,  பாப்பிரெட்டிபட்டி அசோசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: