திரளான பக்தர்கள் பங்கேற்பு அரியலூர் புத்தக திருவிழாவில் திரளான மாணவிகள் பங்கேற்பு

அரியலூர், ஜூலை 23: அரியலூரில் 5வது ஆண்டாக தமிழ் பண்பாட்டு பேரமைப்பு சார்பில் புத்தக திருவிழழ நடந்து வருகிறது. கண்காட்சியில் 70க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு சென்னை, மதுரை, தஞ்சாவூர் மற்றும் பல இடங்களில் இருந்து புத்தக நிறுவனங்கள் தங்கள் பதிப்புகளை கண்காட்சியில் வைத்துள்ளன. இதில் சித்த மருத்துவம், வீட்டு தயாரிப்புகள், பல்சுவை உணவுகள், எல்ஐசி பாலிசி பற்றிய குறிப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பதாகைகள், துணிப்பைகள், இருசக்கர வாகனங்கள், கார்கள், பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன.இதை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பார்வையிட்டு வாங்கி சென்றனர் புத்தக விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக தரப்பட்டது. மேலும் குடும்பத்தின் பொற்காலம் அந்த காலமே, இந்த காலமே என்ற தலைப்பில் பேராசிரியர் சாலமன் பாப்பையா குழுவினரின் பட்டிமன்றம் நடந்தது.

Related Stories: